இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் துவங்கிய கட்சியில் இருந்து, அக்கட்சியின் தலைவர் அதிரடியாக விலகி உள்ளார்.
அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்றப் பெயரில், எஸ்ஏ சந்திரசேகர் புதிதாக கட்சி ஒன்றினை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். மேலும், நான் தான் விஜயின் முதல் ரசிகன் எனவும், விஜய் ரசிகர் மன்றத்தினை உருவாக்கியவன் எனவும் கூறி வந்தார். விஜய்க்கும், அவருடைய ரசிகர் மன்றத்திற்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தன்னுடைய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
அதில் தன்னுடையத் தந்தை உருவாக்கியுள்ள கட்சியில், தன்னுடைய ரசிகர்கள் எனக்காக சேர வேண்டாம் எனவும், அதற்கும் நமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில், அந்தக் கட்சியில் பொருளாளராக விஜயின் தாய் சோபனாவும், தலைவராக பத்மநாபன் என்ற ஆர்கே ராஜா என்பவரும் இருந்து வந்தனர். இந்நிலையில், திடீரென்று விஜயின் தாய் சோபனா அந்தக் கட்சியில் இருந்து விலகினார்.
இது கட்சி என்று தன்னிடம் எஸ்ஏசி கூறவில்லை எனவும் பேட்டியளித்தார். இந்த சூழலில், அந்தக் கட்சியில் இருந்து பத்மநாபனும் தற்பொழுது விலகி உள்ளார். தன்னுடைய தலைவர் பதவியினை அவர் தற்பொழுது ராஜினாமா செய்துள்ளார். இதனால், எஸ்ஏசி கட்சியானது கிட்டத்தட்ட காலியாகி விட்டது. இன்னும் எஸ்ஏசி மட்டுமே உள்ளார் என, பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.