மீண்டும் கேப்டனாகும் சச்சின்! 11 டி20 போட்டிகளில் களமிறங்கும் கிரிக்கெட் கடவுள்!

14 February 2020 விளையாட்டு
sachinreturns.jpg

கிரிக்கெட்டின் கடவுளாக, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் பார்க்கப்படுகின்றார். அவர் செய்யாத சாதனைகளும் இல்லை. அவர் பார்க்காத போட்டிகளும் இல்லை. அவர் அனுபவிக்காத வலிகளும் இல்லை. அவர் இனி விளையாடமாட்டாரா என, ஏங்கும் பல ரசிகர்களும் இன்னும் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு, ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. ஆம், மாஸ்டர்பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் விளையாட உள்ளார். அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக அல்ல, இந்திய லெஜெண்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தி, உலகளவில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெ.இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாட உள்ளனர்.

அதற்கு லெஜண்ட்ஸ் எனப் பெயர் வைத்துள்ளனர். மொத்தமாக, 11 டி20 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும், இந்தியாவில் நடைபெற உள்ளன. அதற்கான அட்டவணைத் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த அட்டவணைப்படி, அனைத்துப் போட்டிகளும் மாலை ஏழு மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளை, கலர்ஸ் டிவி நெட்வொர்க் ஒளிபரப்ப உள்ளது.

இந்திய லெஜெண்ட்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கரும், வெ.இண்டீஸ் அணிக்காக பிரைன் லாராவும் கேப்டனாக விளையாட உள்ளனர். போட்டியின் அட்டவணைப் பின்வருமாறு.

மும்பை வான்கடே மைதானத்தில் 2 போட்டிகள், புனே மைதானத்தில் 4 போட்டிகள், நவி மும்பை மைதானத்தில் 4 போட்டிகள் மற்றும் பிர்பேன் நகரில் கடைசி போட்டி நடைபெற உள்ளது. மார்ச் 7 : இந்திய லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (மும்பை, வான்கெடே), மார்ச் 8: ஆஸி. லெஜண்ட் - இலங்கை லெஜண்ட்ஸ் (வான்கெடே), மார்ச் 10: இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (பாட்டீல் ஸ்டேடியம், நவி மும்பை).

மார்ச் 11: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்), மார்ச் 13: தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்), மார்ச் 14: இந்தியா லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் ( புனே), மார்ச் 16: ஆஸி. லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (புனே).

மார்ச் 17: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (புனே), மார்ச் 19: ஆஸி. லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் (நவி மும்பை), மார்ச் 20: இந்தியா லெஜண்ட்ஸ் - ஆஸி. லெஜண்ட்ஸ் (புனே), மார்ச் 22: இறுதிப் போட்டி - பிர்பேர்ன் ஸ்டேடியம், மும்பை.

HOT NEWS