ராகுலை சந்தித்த சச்சின் பைலட்! பஞ்சாயத்து முடிந்தது!

12 August 2020 அரசியல்
sachinpilot.jpg

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த உள்கட்சிப் பஞ்சாயத்தானது, தற்பொழுது முடிவிற்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையில் அதிகார மோதல் வெடித்தது. இதனையடுத்து, தன்னுடைய ஆதரவாளர்களுடன் சச்சின் பைலட், தனியார் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதிவியானது பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் சேர்வார் எனப் பலரும் ஆரூடம் கூறினர். செய்தி நிறுவனங்கள் பலவும் அவ்வாறே கூறி வந்தன. இந்த சூழ்நிலையில், சச்சின் பைலட்டினை சமரசம் செய்யும் முயற்சியில், பல காங்கிரஸ் கட்சியினர் மிக வேகமாக செயல்பட்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தியினை சந்தித்த சச்சின் பைலட், தங்களுடைய குறைகளையும், பிரச்சனைகளையும் கூறியுள்ளார். அதனை நிதானமாக இருவரும் கேட்டுள்ளனர். இவருடைய பேச்சிற்கு மதிப்பளித்து, மூன்று பேர் கொண்ட குழுவினை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உருவாக்கி உள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சச்சின் பைலட், தற்பொழுது தாம் கட்சிப் பணியாற்றிட உள்ளதாகவும், பதவி முக்கியமல்ல, மரியாதையே முக்கியம் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS