பாஜகவினை நோக்கி சச்சின் பைலட்! உள்கட்சி மோதலால் காங்கிரஸ் கதறல்!

13 July 2020 அரசியல்
sachinpilot.jpg

தற்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கடுமையான அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது.

202 பேர் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும், வெளியில் இருக்கும் 18 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மொத்தம் 125 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி செய்கின்றது. பாஜவிற்கு 72 எம்எல்ஏக்களின் ஆதரவுடன், வெளியில் இருக்கும் 3 எம்எல்ஏக்களின் ஆதவு உள்ளது.

இதனிடையே, கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்தியதுத் தொடர்பாகவும், ஆட்சியினைக் கவிழ்க்க முயற்சித்தது தொடர்பாகவும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, துனை முதல்வர் சச்சின் பைலட், தற்பொழுது முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளார். அவருடைய ஆதரவு எம்எல்ஏக்களும் சச்சின் பைலட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில், சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைவார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இன்று காலையில் நடைபெற்றக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் 90 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, அசோக் கெலாட் பதவி தப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தனியார் டிவி சேனலுக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்த சச்சின் பைலட், காங்கிரஸை விட்டு விலகும் எண்ணம் இல்லை எனக் கூறினார்.

நான் பாஜகவிற்கு செல்வதாக இல்லை என சச்சின் பைலட் தனியார் தொலைக்காட்சிக்குப் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

HOT NEWS