ஈரானைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் ஸ்டாரான, சஹார் தாபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல, தன்னை மாற்றிக் கொள்ள நினைத்த பாத்திமா கிஸ்வாந்த் என்றப் பெண்மணி, பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன்னை அவரைப் போல மாற்றிக் கொள்ள முயற்சித்தார். பின்னர், இன்ஸ்டாகிராமில் சஹார் தாபர் என்ற பெயரில் கணக்குத் தொடங்கி, அதில் தன்னுடைய போட்டோக்களைப் பதிவேற்றம் செய்து வந்தார்.
இதனால், குறுகிய நாட்களில் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். தொடர்ந்து, அவர் அவ்வாறு செய்து வந்ததால், ஈரான் அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இளைஞர்களைத் தவறான பாதையில் நடக்கத் தூண்டும் விதத்தில் நடந்து கொண்டது, முறையற்ற வழியில் பணம் சம்பாதித்தது, வன்முறையைத் தூண்டும் விதத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்தது, என்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் ஜாம்பியைப் போல புகைப்படம் எடுத்துக் கொண்டு, பதிவேற்றம் செய்தக் காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார். தற்பொழுது அவர் ஈரான் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு, கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக, அவருடைய வழக்கறிஞர் பாயம் டெர்ப்சான் தெரிவித்துள்ளார். சிறைத்துறை நிர்வாகம், அனைத்து விஷயங்களிலும் அலட்சியமாக இருப்பதாக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானில் சிறையில் உள்ள சஹார், தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். மேலும், அவருடன் பழகியவர்களும் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.