ஷீரடியில் சாய் பாபா பிறக்கவில்லை எனவும், அவர் பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடமாகும் என, மஹாராஷ்டிர முதல்வரின் கருத்துக்குத் தற்பொழுது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில், ஷீரடியில் சாய் பாபா பிறக்கவில்லை. அவர் பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடத்தில் பிறந்தார் எனக் கூறினார். இதனால், ஷீரடி பகுதியில் வசிக்கின்ற மக்கள், உத்தவ் தாக்ரேயின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஷீரடிக்கு சாய் பாபாவின் பக்தர்கள் வராவிட்டால், இங்குள்ள வணிகம் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவிக்கும் பொருட்டு, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர். ஆனால், உத்தவ் தாக்ரே கூறுகையில், பத்ரி நகர வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் வளங்கப்படும், அங்கு பக்தர்கள் செல்வதன் மூலம் அந்நகரம் வளர்ச்சி பெறும் என்றுக் கூறியுள்ளார்.