பிஜேபியில் இணைந்தார் பிரபல பேட்மிட்டண் வீராங்கணை!

29 January 2020 அரசியல்
sainanehwalbjp.jpg

இந்தியாவின் முன்னணி பேட்மிட்டண் வீராங்கணையான சாய்னா நெஹ்வால், தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார்.

29 வயதுடைய சாய்னா நெஹ்வால், காமன்வெல்த், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, இந்திய நாட்டிற்காக தங்கம் வென்றவர். தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தினையும் அடைந்தவர். தொடர்ந்து, மோடியின் கருத்துக்களுக்கு ஆதரவளித்து வந்தார் சாய்னா.

இந்நிலையில், இன்று காலையில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து, பாஜகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவின் பொதுச் செயலாளர் அர்ஜூன் சிங் முன்னிலையில், அவர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவர் இது குறித்துக் கூறுகையில், மோடியின் கருத்துக்களால் தான் ஈர்க்கப்பட்டதாகவும், அவருடைய உழைப்பின் காரணமாக, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்பொழுது டெல்லியில் மாநிலத் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு பாஜகவின் சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கருத்தப்படுகின்றது.

HOT NEWS