மும்பையில் சாதுக்கள் தாக்குதல்! வைரலாகும் வீடியோ!

20 April 2020 அரசியல்
saintattacked.jpg

மும்பையில் இந்து சாதுக்கள் தாக்கப்பட்ட விஷயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அநாவசியாமக வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில், இந்து சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

சூரத்தில் இருந்து வந்த அவர்கள், கண்ட்விலி என்றப் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது, காட்சின்சலே கிராமத்தின் கசா தாலுக்காவிற்கு அருகில் வசித்து வருகின்ற பழங்குடியினர், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ் வாகனத்தில் மொத்தம் மூன்று பேர் வந்துள்ளனர். இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், அவர்களை திருடர்கள் என தவறாக நினைத்த பழங்குடியின மக்கள், கைகளில் கிடைத்த கட்டைகள், கற்கள் மற்றும் பொருட்களை வீசி அவர்கள் மீது, தாக்குதல் நடத்தினர். அவர்களில், இரண்டு சாதுக்களும் படுகாயம் அடைந்தனர். இதனால், போலீசார் வானைத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி, கூட்டத்தினை கலைத்தனர். இச்சம்பவம், இந்து ஆதரவாளர்களிடம் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண சாதுக்களை இப்படி தாக்கலாமா என, சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS