இந்தியாவின் உற்பத்தி குறைந்துள்ளது! ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

17 April 2020 அரசியல்
shaktikantadasrbi.jpg

இந்தியாவின் உற்பத்தியானது, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்தார். அதில், இந்தியாவின் உற்பத்தியானது, கடந்த நான்கு மாதங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மையை பாதுகாப்பதில் கவனமாக உள்ளோம். ரெப்கோ விகிதமானது, 5.15% இருந்து, 4.4% ஆக குறைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம், சிறு குறு வியாபாரங்களைப் பாதுகாக்க இயலும்.

கடன் வசூலிப்பதை மூன்று மாதங்கள் நிறுத்த உதரவிடப்பட்டு உள்ளது. அதற்கு, எவ்வித வட்டியும் வசூலிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பணத்தினை சேமித்து வைத்திருப்பவர்களுக்கு, முழு பொறுப்பு ஏற்கப்படும். தற்பொழுது ஐஎம்எப் கணிப்பின் படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1.89% ஆக உள்ளது. அடுத்த ஆண்டு, 7.4% ஆக இருக்கும் என்று கூறினார்.

அண்ணியச் செலவானது கையிருப்பானது, இந்தியாவிடம் சிறப்பான நிலையில் தான் உள்ளது. பொருளாதாரத்தினை மேம்படுத்தப் புதிய திட்டங்களையும் தீட்டி வருகின்றோம். மற்ற ஜி20 நாடுகளின் வளர்ச்சியானது. 1.89% ஆக உள்ளது. விரைவில், இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையை அடையும் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS