சென்னையைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள், புதிதாக கணிணி பிராசஸரைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
இந்தப் பிராசஸரை செய்வதற்கு இஸ்ரோவும் உதவியுள்ளது. இந்தப் பிராசஸர் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பானது எனவும், இதனை அனுமின் நிலையங்கள், வையர்ஸ் பொருட்கள், அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தலாம் என கூறுகின்றனர் இதனைக் கண்டுபிடித்த மாணவர்கள்.
இந்தப் பிரசாஸருக்கு சக்தி எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், இந்த பிராசஸரை டிரோஜான் போன்ற வைரஸ்களால், தாக்க இயலாதவாறு வடிவமைத்துள்ளதாக கூறியுள்ளனர்.