இந்திய அளவில் பிரசித்திப் பெற்ற சக்திமான் நாடகமானது, விரைவில் படமாக்கப்படும் என, முகேஷ் கண்ணா கூறியுள்ளார்.
இந்தியாவில் 90ஸ் கிட்ஸ்களின் பிரதான நாடகமாக இருந்தது சக்திமான். இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ நாடகமான இது, பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தற்பொழுது வரை, இந்த நாடகத்திற்கு இணையாக எவ்வித நாடகமும் உருவாக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நாடகத்தினை விரைவில் படமாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து பேசியுள்ள அந்த நாடக நடிகரான முகேஷ் கண்ணா, தற்பொழுது உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விரைவில் சக்திமான் நாடகாமனாது திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டு உள்ளதாகக் கூறியுள்ளார். அத்துடன், இந்தப் படத்தினை 3 பாகங்களாக தயாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.