சென்னை நோக்கியா ஆலையை வாங்கிய சால்காம்ப்! 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

27 November 2019 அரசியல்
nokia6.2.jpg

நோக்கியா நிறுவனம் தன்னுடைய போன் தயாரிப்பினை நிறுத்தியதன் காரணமாக, சென்னையில் உள்ள நோக்கியத் தொழிற்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக, அங்கு வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வேறு இடத்திற்கு வேலைத் தேடி சென்றுவிட்டனர்.

அந்த இடத்தில் உள்ள நோக்கிய நிறுவனம் மூடப்பட்டு இருந்த போதிலும், அதன் மதிப்பு குறையாமல் இருந்தது. இதனையடுத்து, தற்பொழுது அந்த நோக்கிய ஆலையை பின்லாந்து நாட்டினைச் சேர்ந்த சால்காம்ப் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

வரும் மார்ச் மாதம் இந்த ஆலை செயல்படத் தொடங்கும் எனவும், அப்பொழுது 7,000 பேரினை வேலைக்கு அந்நிறுவனம் எடுக்க உள்ளது எனவும் கூறினார். பின்னர், ஆலையின் பணிகளும், உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு 10,000 வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, பேராக மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சால்காம்ப் நிறுவனம் ஆப்பிள் போன்களுக்கான, பெரும்பாலான உதிரிப் பாகங்களைத் தயாரித்து வருகின்றது. மேலும், செல்போன் சார்ஜர்கள் உட்பட பல உதிரிப் பாகங்களைத் தயாரித்து விற்று வருகின்றது.

Recommended Articles

HOT NEWS