பத்து மாதங்களுக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சேலத்தில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது பலத்த எதிர்பர்ப்புகளுக்கு இடையில், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு உள்ளன. பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு வரலாம் என, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், பள்ளிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
மாணவ, மாணவிகளும் ஆர்வமாகப் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டதில் உள்ள மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, பள்ளிகள் அனைத்திலும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.