கடந்த 2017ம் ஆண்டு அன்று, பெற்றோர்கள் அனுமதியுடன், நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டார்.
அப்பொழுதில் இருந்து, அம்மணி கிளாமரில் இறங்கிவிட்டார். பொதுவாக, நடிகைகள் திருமணம் செய்து கொண்டால், கிளாமர் கதாப்பாத்திரங்களில் நடிக்கமாடார்கள். ஆனால், நடிகை சமந்தா அப்படியே தலைகீழாக நடித்து வருகிறார்.
திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், எப்பொழுது உங்களுக்குக் குழந்தைப் பிறக்கும் எனப் பலரும் தங்களுடைய எதிர்பார்ப்பினை கூறி வந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் சமந்தா கடுப்பாகிவிட்டார்.
இந்த கேள்விக்குப் பதிலளித்துள்ள சமந்தா, எனக்கு 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அன்று, குழந்தைப் பிறக்கும் என்று கடுப்புடன் முகத்தில் அடிப்பது போல் பதிலளித்துள்ளார். இதனால், இனி குழந்தை எப்பொழுது பிறக்கும் என அவருடைய ரசிகர்கள் கேட்கமாட்டார்கள் என, சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.