என் மகனைப் பிடிக்காமல் இருந்ததாகவும், அவனை எடுத்துச் சென்றுவிடுங்கள் என தன்னுடையக் கணவரிடம் கூறியதாகவும், நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
2002ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான மெய்னி தில் துஜ்கோ தியா என்றப் படத்தின் மூலம் அறிமுகமான சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானார். அறிமுகமாகி ஒரு சிலக் காலங்களிலேயே, அதிக வரவேற்பினைப் பெற்ற நடிகை என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு பலப் படங்களில் நடித்து வந்தார்.
வெடி, வேட்டை, நடுநிசி நாய்கள், அசல் உள்ளிட்டப் படங்களில் நடித்து வந்தார். பின்னர், பாலிவுட் பக்கம் சென்றவர், கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அத்துடன் படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். திருமணத்திற்குப் பிறகு, அவருக்கு முதல் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்த சமீரா, அரவடுயை கணவர் அக்சய் வர்தேவினை எடுத்துச் செல்லக் கூறினாராம்.
அவர் உடல்எடையும் அதிகரித்ததால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானாராம். அப்பொழுது, ஏன் அவ்வாறு பேசினேன் எனத் தெரியவில்லை எனவும் அவர் கூறியிருக்கின்றார். தற்பொழுது ஹன்ஸ் மற்றும் நைரா என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கின்றார். அவர் ஊக்கப்படுத்தும் விதமாகப் பேசும் பொழுது, ஒரு நிகழ்ச்சியில் இவ்வாறுப் பேசியுள்ளார்.