பிக்பாஸ் பிரபலமான தர்ஷன் மீது, அவருடைய முன்னாள் காதலி சனம் ஷெட்டி போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
தற்பொழுது பிக்பாஸ் 4வது சீசனானது தொடங்கி உள்ளது. அதில், நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி கலந்து கொண்டு உள்ளார். அவர் தன்னுடைய முன்னாள் காதலரான தர்ஷன் மீது, சென்னை காவல்துறையிடம் புகார் தெரிவித்து உள்ளார். அவருடையப் புகாரில், நான் தர்ஷனைக் காதலித்தேன். இருவரும் ஒரு வருடம் காதல் பறவைகளாக சுற்றித் திரிந்தோம். அவருக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில், அவர் திடீரென்று என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். திருமணமும் நிறுத்தப்பட்டது. இதனால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். நம்பிக்கை மோசடி மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், தர்ஷன் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.