pic credit:tlc.com/smothered
உலகளவில் தற்பொழுது பெரிய அளவில் பேசப்படும் ஷோ வாக மாறியுள்ளது எஸ்மதர்டு எனும் ஷோ. இதனை டிஎல்சி நிறுவனம் ஒளிபரப்பி வருகிறது. இதில் தன் மகளுடன் உயிரும், உடலுமாக வாழும் தாயினைப் பற்றியும், தாய் மற்றும் குழந்தைகளுக்கு இடையே உள்ள, புனிதமான உறவினைப் பற்றியும் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில், 44 வயது சாண்ட்ராவும், 20 வயது மரியாவும் கலந்து கொண்டனர். இவர்கள், இருவரும் தாய் மற்றும் மகள் ஆவர். இருவரும், ஒன்றாகவே அனைத்து இடங்களுக்கும் செல்கின்றனர். அனைத்துச் செயல்களையும் ஒன்றாகவே செய்கின்றனர். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததில்லையாம்.
தன் தாயின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தன் தாயின் உதட்டினைப் போல, தன் உதட்டினையும் அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றிக் கொண்டார். அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், எங்களுக்கு நண்பர்கள் கிடையாது. எனக்கு என் அம்மாவே தோழி. அவருக்கு நான். அவரை விட்டு நான் எங்கும் செல்வதில்லை. இரண்டு பேரும் சேர்ந்த, உணவு சமைப்போம், சாப்பிடுவோம், துணி துவைப்போம், குளிப்போம், சேர்ந்து தூங்குவோம் எனக் கூறினார்.
மேலும், இதுபற்றிப் பேசிய தாய் சாண்ட்ரா, நான் அவள் பிறந்தது முதல், அவளை கஷ்டப்படவிட்டது இல்லை. நான் எங்கு சென்றாலும் அவளையும், என்னுடனேயே அழைத்துச் சென்றுவிடுவேன். அவள் இல்லாமல் நான் இல்லை எனக் கூறினார்.
இருவரும் சேர்ந்து, இரண்டு ஆண்களுடன் டேட்டிங் செல்கின்றனர். அதற்கு முன், இந்த இரண்டு பேரும் தங்களுடைய உடலை சுத்தம் செய்வதற்கு, அழகு நிலையத்திற்கு செல்கின்றனர். அங்கு, இருவரும் தங்கள் உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக நிற்கின்றனர். அங்கு வரும் அழகுக் கலை நிபுணர், பொதுவாக கணவனுடன் பெண்கள் வருவர், அல்லது தோழியுடன் வருவர். இதனைப் போன்று தாயுடன் ஒரு பெண் வந்து, அதுவும் இருவரும் நிர்வாணமாக நின்றனர். இதனை என்னால் நம்ப முடியவில்லை என்கின்றார். அதே சமயம், இது பற்றி மகள் மரியாக் கூறுகையில், பொதுவாக எந்த ஒரு பெண்ணும், தாயின் முன் நிர்வாணமாக நிற்க தயங்குவார்கள். எனக்கு, அவர் தாய் மட்டுமல்ல, அவரே எனக்கு எல்லாம். அவர் இல்லாமல் நான் இல்லை என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இருவரும் சேர்ந்து, இரண்டு ஆண்களுடன் ஒரு ஹோட்டலில் அமர்ந்து உரையாடுகின்றனர். டேட் செய்கின்றனர். அந்த அளவிற்கு இருவரும் ஈருடல், ஓருயிராக இருக்கின்றனர்.
source:https://www.thesun.co.uk/fabulous/9768551/mum-daughter-naked-spray-tan-double-date-men-twenties/