விஜய் சேதுபதி நடித்த, சங்கத் தமிழன் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகாது என அப்படக்குழு அறிவித்துள்ளது.
விஜயா பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பத்து என்றதுக்குள்ள உட்பட, திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தர் இத்திரைப்படத்தினையும் இயக்கி உள்ளார்.
இத்திரைப்படம், கடந்த மாதமே வெளியாக வேண்டிய நிலையில், இந்த மாதம் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக, அறிவிப்புகள் வெளியானது. இதனால், தீபாவளிக்கு, விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதிப் படத்துடன், சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாக இருந்தது.
விஜயின் பிகில் திரைப்படம், சுமார் 700 திரையறங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், கைதி திரைப்படம் 200க்கும் மேற்பட்ட திரையறங்குகளில் வெளியாக உள்ளது. இதனால், சங்கத்தமிழன் திரைப்படத்திற்கு திரையறங்கு கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்தது.
இந்நிலையில், சங்கத் தமிழன் திரைப்படம், தீபாவளி அன்று வெளியாகாது எனவும், அதற்குப் பதிலாக நவம்பர் 8ம் தேதி அல்லது 15ம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான விஜய புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதனால், கைதி திரைப்படத்திற்கு 300 முதல் 350 திரையறங்குகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.