சங்கத்தமிழன் திரைவிமர்சனம்!

19 November 2019 சினிமா
sangathamizhan.jpg

ஒரு வேளை, தெலுங்கு படத்தின் ரீமேக்காக இது இருக்குமோ என, நம்மை யோசிக்க வைக்கும் அளவிற்கு ஒரு படத்தினை இயக்குநர் இயக்கி இருக்கின்றார். பத்து என்றதுக்குள்ள, ஸ்கெட்ச் போன்ற படங்களை எடுத்த விஜய் சந்தர் சங்கத்தமிழன் திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.

சினிமாவில் வாய்ப்புத் தேடி சென்னை வருகிறார், நடிகர் விஜய் சேதுபதி. அவருக்கு சூரி நண்பனாக இருக்கின்றார். பட வாய்ப்புத் தேடி சென்னையில் திரியும் விஜய்க்கு, தொழிலதிபர் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. என்ன வாய்ப்புத் தெரியுமா?

தேனியில் உள்ள காப்பர் ஆலைக்கு எதிராகப் போராடும் கூட்டத்திற்கு, சங்கத்தமிழன் என்ற விஜய்சேதுபதி உள்ளார். அவரைக் கொல்லும் அந்த காப்பர் ஆலையின் அதிபதி தான், அந்த நடிகர் விஜய் சேதுபதியினை சங்கத்தமிழன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்கின்றார். பின்னர், என்ன கத்திப் பட பாணியில் மக்களுக்காகப் போராட ஆரம்பிக்கின்றார். இடையில் காதல், மோதல் மற்றும் அனல் பறக்கும் பஞ்ச் டயாலாக்குகள் என படம் கமர்ஷியல் படமாக ஓடுகின்றது.

விஜய் சேதுபதிக்கு நடனம் வராது. அவரை வலுக்கட்டாயமாக ஆட வைத்து இருக்கின்றனர். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிக மோசமாக உள்ளது எனப் பெயர் பெற்ற நிலையில், படத்தின் பின்னணி இசைக் கூட நம்மை ஈர்க்கவில்லை. அழுகப் பழையக் கதை, தரமற்றத் திரைக்கதை, யூகிக்கக் கூடிய திருப்பங்கள், விஜய் சேதுபதியினை மாஸாக காட்ட வேண்டும் என்பதற்காக அதிக ஸ்லோ மோஷன் காட்சிகள் என சலிப்படைய வைக்கின்றது சங்கத்தமிழன்.

தமிழ் சினிமாவில் பல சமூகத் திரைப்படங்கள் வந்துள்ளன. அவைகளை எல்லாம் பார்க்காதவர்கள், இப்படத்தினைப் பார்த்தாலே போதும். ஏனென்றால், அந்தப் படங்களின் கதைகள் இப்படத்தில் உள்ளன. டக்குன்னு யோசிச்சா இது அட்லி ஸ்டைல் ஆச்சேன்னு தோணும். இருந்தாலும், அட்லி எப்பவுமே வேற லெவல் தான். இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் சுமார் தான்.

விஜய் சேதுபதி இந்தப் படத்திற்கு ஏன் ஒப்புக் கொண்டார் எனத் தெரியவில்லை. ஒருவேளை, படத்தின் தலைப்பு மற்றும் மக்கள் பிரச்சனைப் பற்றியக் கதை என்பதால் ஒப்புக்கொண்டு இருக்கலாம். இது உண்மையில், விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். ஆனாலும், அவரை மாஸாக காட்டுவதால், ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

மொத்தத்தில், சங்கத் தமிழன் சங்ககாலத் தமிழன்

ரேட்டிங் 2/5

HOT NEWS