இணையத்தில் எஸ்பிபி மற்றும் யேசுதாஸ் பங்குபெறும் சங்கீத சேது என்ற இசை நிகழ்ச்சி தயாராகி வருகின்றது.
தற்பொழுது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கபட்டு உள்ளது. அன்றாட வாழ்க்கைப் பணிகள் மட்டுமல்ல, பொழுதுபோக்கு துறைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால், பொதுமக்கள் கடும் விரக்தியில் உள்ளனர். போதாத குறைக்கு, அனைத்து டிவி சேனல்களும், பழைய சீரியல்கள் மற்றும் பழைய டிவி ஷோக்களை ஒளிபரப்பி வருவதால், பொழுதுபோக்கிற்கு வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அனைத்திந்திய பாடகர்கள் அமைப்பானது, புதிய நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
அந்த நிகழ்ச்சிக்கு சங்கீத சேது எனவும் பெயரிட்டுள்ளனர். சுமார் மூன்று நாட்களுக்கு இந்த நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளதால், இணையத்தின் மூலம் இந்த நிகழ்ச்சியினை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்பிபி, யேசுதாஸ், சங்கர் மகாதேவன், சோனு நிகாம், ஹரிஹரன் லதா மங்கேஷ்கர் உள்ளிட்டப் பலப் பாடகர்கள் இணைந்துள்ளனர். அவர்கள், தங்களுடைய வீடுகளில் இருந்தே பாடல்களைப் பாட உள்ளனர்.
இரவு ஒன்பது மணிக்கு இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாக உள்ளது. இருப்பினும், இது குறித்த மேலும் விரிவானத் தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டு உள்ளது.