கன்னட நடிகை ராகினி திவேதிக்கும், போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கைது செய்த நிலையில், தற்பொழுது சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்திய அளவில் சினிமா உலகில், போதைப் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட்டில் இது தற்பொழுது பெரும் பூகம்பத்தினையே உருவாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், கன்னட நடிகை ராகினி திவேதி, போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக, போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடைய வீட்டினை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்தே, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பார்டியில் கலந்து கொண்ட நபர் தான், இவரைப் போட்டுக் கொடுத்து உள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.