வரலாற்றிலேயே முதல் முறை! அமெரிக்க செனட்டராக திருநங்கை தேர்வு!

04 November 2020 அரசியல்
sarahemcbride.jpg

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், அமெரிக்க செனட்டராக முதன் முறையாக திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், அமெரிக்க செனட்டராக முதன் முறையாக திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவில் தற்பொழுது தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது வேகமாக நடைபெற்று வருகின்றது. அதில், குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்பும், தேசிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பிடனும் போட்டியிட்டனர். இதில், இருவருக்கும் இடையில், கடுமையானப் போட்டி நிலவி வருகின்றது. இந்த சூழலில், புதுவித விஷயமும் நடைபெற்று உள்ளது.

அமெரிக்காவின் டெல்லாவேர் மாகாணத்தில், டெமோக்ராட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கையான சாரா பரைட், வெற்றி பெற்றுள்ளார். இதுவரை அமெரிக்காவில் யாரும் இவ்வாறு வெற்றி பெற்றது கிடையாது. முதன் முறையாக அமெரிக்க வரலாற்றில், ஒரு திருநங்கை செனட்டராக பதவி வகிக்கப் போவது இதுவே முதல் முறையாகும்.

HOT NEWS