இது கோவா அல்ல, மஹாராஷ்டிரா என சரத் பவார் அதிரடியாகப் பேசியுள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில், மஹாராஷ்டிராவில், பாஜக ஆடசியமைத்தது. மேலும், தனக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தது.
இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சிவசேனா வழக்குத் தொடர்ந்தது. உடனடியாக, கர்நாடகா மாநிலத்தில் நடத்தியது போல, இங்கேயும் நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என இந்த வழக்கின் சார்பாக ஆஜரான கபில்சிபில் வாதாடினார். இதனை விசாரித்த நீதிபதிகள், பாஜக ஆட்சியமைத்தது சட்டத்திற்குப் புரம்பானது எனவும், இது குறித்து, அவர்கள் சமர்பித்த கட்சியினரின் ஆதரவுக் கடிதத்தையும், கூட்டணிக் கட்சியினரின் ஆதரவுக் கடிதத்தையும், ஆளுநரிடம் அளித்தக் கடிதத்தையும் சமர்பிக்க வேண்டும் எனவும் கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.
பாஜகவிற்கு ஆதரவளித்த, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பேரவைத் தலவரும், சரத்பவாரின் அண்ணன் மகளுமான அஜித் பவார், தான் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பதாகவும், பாஜகவிற்கு எங்கள் ஆதரவு உண்டு எனவும் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த சரத் பவார், அஜித் பவார் தற்பொழுது குழப்பத்தினை உண்டாக்கி வருவதாகவும், அதைப் பற்றி யாரும் கண்டுகொள்ள வேண்டாம் எனவும் கூறினார்.
இந்நிலையில், ஹோட்டல் ஹயாத்தில் 162 எம்எல்ஏக்களும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பும், போலீசார் பாதுகாப்பும அளிக்கப்பட்டன. 162 எம்எல்ஏக்களுமே, தாங்கள் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக உறுதி மொழி ஏற்றனர்.
பேரவைத் தலைவராக இருப்பதால், அவரேத் தலைவர் எனவும் அவருடைய ஆதரவேத் தேவை எனவும் பாஜகவின் அஷிஸ் ஷெல்லார் கூறியுள்ளார். ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, கட்சியில் இருந்தும், பேரவைத் தலைவர் பதவியில் இருந்தும் அஜித் பவாரை நீக்கி, சரத் பவார் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு வரை, ஹயாத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் அனைவரையும், வேறொரு ஹோட்டலில் தங்க அழைத்துச் செல்லப்பட்டனர். தற்பொழுது, 158 எம்எல்ஏக்கள் தங்களுடைய கையொப்பம் அடங்கிய, கடிதத்தினை கட்சித் தலைமையிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.