சரத்குமார் கண்ணீர்! சிரஞ்சீவி செய்தது பெரிய உதவி!

12 May 2020 அரசியல்
sarathkumarcried.jpg

தன்னுடைய ஆரம்ப காலத்தில் சிரஞ்சீவி செய்த நன்றியினைக் கூறும் பொழுது, நடிகர் சரத்குமார் கண்ணீர் விட்டு அழுவிட்டார்.

தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு, வீடியோ கால் மூலம் நேரலையில், நடிகர் சரத்குமார் பேசினார். அப்பொழுது சிரஞ்சீவியுடனான நட்பு குறித்து, தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சரத்குமார், நான் ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல், மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பொழுது எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் உதவி கேட்டேன்.

அதற்கு அவர், நடிகர் சிரஞ்சீவியிடம் கால்ஷீட் வாங்கிக் கொடுங்க. அவரை வைத்துப் படம் எடுக்கின்றேன். அதில் வருகின்ற லாபத்தினை உங்களுக்குத் தருகின்றேன் என்றார். நான் இது குறித்து பேசுவதற்காக, சிரஞ்சீவியினைப் பார்க்கச் சென்றேன். அவர் என்னை அன்பாக உபசரித்தார். இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, என்ன விஷயம் சரத் எனக் கேட்டார்.

அப்பொழுது, நான் இந்த விஷயத்தினைக் கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே, தற்பொழுது ஒரு படம் நடித்துக் கொண்டு இருக்கின்றேன் இது முடிந்ததும் அடுத்தப் படத்தினை தயாரிக்கலாம் என்றுக் கூறினார். உங்கள் சம்பளம் எவ்வளவு எனக் கேட்டேன். அதற்கு, நீயேப் பணக் கஷ்டத்தில் உள்ளாய். பின்னர் எனக்கு எதற்கு சம்பளம் என்றுக் கூறினார். இதைக் கூறும் பொழுது, நடிகர் சரத் குமார் கண் கலங்கிவிட்டார்.

இது தற்பொழுது சூமக வலைதளங்கள், மற்றும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS