நான் சிறையில் நன்றாக உள்ளேன் எனவும், என்னுடைய உடல்நலத்தில் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனவும், சசிகலா தெரிவித்து உள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழ்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அவருடைய சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகின. இதனை மறுக்கும் விதமாக, தன்னுடைய வழக்கறிஞர் ராஜா செத்தூர் பாண்டியனுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிலர் என்னைப் பற்றி உள்நோக்கத்துடன் இவ்வாறு விஷமத்தனமான புரளியினைப் பரப்பியுள்ளனர். தன்னை திவாகரனின் மகன் ஜெய் சந்திக்கவில்லை எனவும் கூறியுள்ளார். தேவையில்லாமல் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால், கட்டாயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியுள்ளார்.