உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது டா! நீதிபதியை அவமதித்த காவலர்!

30 June 2020 அரசியல்
sathankulamlockup.jpg

விசாரணைக்குச் சென்ற நீதிபதியினை, உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது என, சாத்தான்குளம் கான்ஸ்டபிள் ஒருவர் கூறியிருப்பது உறுதியாகி உள்ளது.

ஒட்டு மொத்த இந்தியாவினையும் உலுக்கிய சம்பவமாக, சாத்தான்குளம் லாக்கப் டெத் உள்ளது. சாத்தான்குளம் பகுதியில், ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தப் பிரச்சனையானது, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பேசு பொருளாக மாறியது. இதனைப் பற்றி, இந்தியாவின் பலப் பிரபலங்கள் பேசியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து விசாரிக்க உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது. இதனிடையே, இந்த வழக்கினை சிபிஐக்கு மாற்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து, இன்று காலையில் நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். அப்பொழுது காவல்நிலையத்தில் இருந்த காண்ஸ்டபிள் ஒருவர், உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது டா என கூறியிருக்கின்றார்.

இதனையும், உயர்நீதிமன்றத்தில் பாரதிதாசன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவ்வாறு பேசிய மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், அந்த காவல்நிலையத்தில் வேலை செய்தவர்கள் தற்பொழுது பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், கூடுதல் கண்காணிப்பாளர் டி குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் சி.பிரதாபன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.

HOT NEWS