மைக்ரோசாஃப்ட் இயக்குநர் சத்யநாதெல்லாவின் கருத்து! வெடிக்கும் எதிர்ப்புகள்!

15 January 2020 அரசியல்
satyanadella.jpg

பஸ்ஃபீட் நிறுவனத்தின் பேட்டியின் பொழுது, இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் தமக்கு வருத்தம் அளிப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கூறியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

பஸ்ஃபீட் நிறுவனத்தின் பென் ஸ்மித், மைக்ரோடசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லாவிடம் பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியின் பொழுது பேசிய சத்ய நாதெல்லா, இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது. அது மிகவும் தவறு. வங்கதேசத்தில் இருந்து வருபவர், ஒரு நல்ல நிறுவனத்தையோ அல்லது இன்போசிஸின் தலைமை அதிகாரியாகவோ வர இயலும். இதையே நானும் விரும்புகின்றேன் என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் வெடித்தன. பாஜகவினர் உட்பட பலரும் இதனை எதிர்த்து தங்களுடையப் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளையின் சார்பில், சத்ய நாதெல்லாவின் விளக்கமானது வெளியிடப்பட்டது. அதில், அனைத்து நாடுகளும் தங்களுடைய எல்லைகளை வரையறை செய்ய வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்து, குடியேற்றத்தினை வரையறுக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரையில், ஒரு குடியேறியால் தரமான ஸ்டார்ட்-ஆப் நிறுவனத்தையோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தினையோ வழிநடத்த இயலும். இதுவே என் கருத்து என்றுக் கூறியுள்ளார். இந்த அறிக்கையினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

இதற்கு, இந்தியா முழுவதும் உள்ள பாஜகவினர் தங்களுடைய எதிர்ப்பினையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS