அரசர் மற்றும் இளவரசர் தனிமைப்படுத்தப்பட்டனர்! சவுதிக்கு சங்கடம்!

11 April 2020 அரசியல்
mohammedbin.jpg

சவுதி அரசர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர், கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சவுதியின் அரசர் சல்மானிற்கும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிற்கும் கொரோனா வைரஸ் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவர்கள் மருத்துவர்கள் மூலம், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சேர்த்து சுமார் 150 அரச குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களில் அரசர் ஜெட்டா தீவில் உள்ள அரண்மனையில், சிகிச்சைப் பெற்று வருகின்றார் என்றத் தகவல்கள் கசிந்துள்ளன. மற்றவர்கள் கிங் பைசல் ஸ்பெஷல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும், தனித் தீவில் சிகிச்சைப் பெற்று வருகின்றாராம். அந்த கிங் பைசல் மருத்துவமனையில் 500 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும், எந்நேரமும் சிறப்பு மருத்துவர்கள் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்குச் சென்று வந்த அரச குடும்பத்தினர் மூலம், இந்த கொரோனா வைரஸானது பரவி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும், எவர் மூலம் இந்த வைரஸ் பரவியது என்றத் தகவல் முழுமையாக வெளியாகவில்லை.

HOT NEWS