இந்த மாத இறுதியில் எண்ணெய் உற்பத்தி சரியாகிவிடும்! சவுதி தகவல்!

18 September 2019 அரசியல்
saudifire.jpg

இந்த மாத இறுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி சீராகிவிடும் என, சவுதி அரேபியா கூறியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள, அராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான, இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில், ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை யார் நடத்தினார் என்பதுப் பற்றியத் தகவல் இன்னும் உறுதியாக வெளயாகவில்லை. ஹவுத்தி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் இதனைச் செய்துள்ளது என ஒருவர் கூறுகின்றனர். ஈரான் தான் இத்தகையத் தாக்குதலை நடத்தியுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே, கடுமையான தீ விபத்தால், கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில், கச்சா எண்ணெயின் விலை, கடுமையாக உயர ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக, டீசல், பெட்ரோல் உள்ளிட்டப் பலப் பொருட்களின் விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள ஆராம்கோ நிறுவனத்தின் ஊழியர், இம்மாத இறுதியில், மீண்டும் எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கும் எனவும், அதற்கானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆராம்கோ சேர்மன் யாஷிர் அல்-ரூம்மய்யன் கூறுகையில், நாங்கள் எதையும் நிறுத்தவில்லை. ரியாத் நகரில் இருந்து கிட்டத்தட்ட 9.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயில், 7.0 மில்லியன் கச்சா எண்ணெய் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது. இதனைப் பெரும்பாலும், ஆசியாவைச் சேர்ந்த நாடுகளே வாங்குகின்றன. அவர்களுக்கான எண்ணெய் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

HOT NEWS