ஈரான் தாக்குதலால் பற்றி எரியும் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!

15 September 2019 அரசியல்
saudifire.jpg

ஈரான் தாக்குதலுக்குப் பிறகு, தன்னுடைய கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது சவுதி அரேபியா. இதன் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயரும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏமனைச் சேர்ந்த ஹௌத்தி போரட்டக்காரர்களின் ட்ரோன்களால், சவுதியில் உள்ள, அராம்கோ நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் இரண்டு பெரிய ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஒரு நாளைக்கு 5 பில்லியன் பேரல்கள் தயாரிப்பது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது சவுதியின் பாதி உற்பத்தி ஆகும். அதே சமயம் உலகளவில், 5% எண்ணெய் தேவையாகும். இதன் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை, கடுமையாக உயரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு, ஈரான் அரசாங்கமே காரணம் என, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து, ஈரான் எண்ணெய் உற்பத்திக்கு தடைவிதித்துள்ள அமெரிக்கா, இவ்வாறு ஈரானைக் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS