இனிமேல் பாகிஸ்தானிக்கு கடனுதவியும், கச்சா எண்ணெயும் வழங்க இயலாது என, சவுதி அரேபியா அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம், ஜம்மூ காஷ்மீர் விவகாரத்தில், அனைத்து இஸ்லாமிய நாடுகளின் ஆதரவினைப் பெறும் முயற்சியானது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவும் பாகிஸ்தானிற்கு ஆதரவு அளிக்கவில்லை. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மத் குரேஷி, சவுதி அரேபியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இதனால் கடுப்பான சவுதி அரேபியா, தற்பொழுது தான் வழங்கி வந்த 320 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயின் விநியோகத்தினை நிறுத்துவதாக அறிவித்தது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தானிற்கு வழங்கி வந்த 300 கோடி டாலர் நிதியுதவியினையும் நிறுத்துவதாக அறிவித்தது.
மேலும், ஏற்கனவே வழங்க வேண்டிய 100 கோடி டாலர் பணத்தினை, உடனடியாக பாகிஸ்தான் அரசு செலுத்த வேண்டும் என்றுக் கூறியுள்ளது. இதனால், பாகிஸ்தானிற்கும், சவுதி அரேபியாவிற்கும் நீண்ட காலமாக இருந்து வந்த உறவானது தற்பொழுது முடிவிற்கு வந்துள்ளது.