பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அதிரடியாக அறிவித்து உள்ளது.
வருகின்ற நவம்பர் 16ம் தேதி அன்று, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கு திமுக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து இருந்தனர். இதனால், நவம்பர் 9ம் தேதி அன்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு, அந்தந்தப் பள்ளிகளிலேயே நடத்தியது.
அந்தக் கூடத்திற்குப் பெரும்பாலான பெற்றோர்கள் வரவில்லை. மேலும், 45.5% பெற்றோர்கள் மட்டுமே வருகைத் தந்திருந்தனர். அத்துடன், அவர்கள் தங்கள் கருத்துக்களையும் பள்ளி நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நேற்று இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழக உயர்நீதிமன்றம், நீதிபதிகளுக்கே கொரோனா பரவி வருகின்ற சூழலில், இப்பொழுது பள்ளிகளைத் திறப்பதற்கு என்ன அவசரம் எனக் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, முதுகலை பட்டப்படிப்பு, அறிவியில் மற்றும் தொழில்நுட்பம் இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவியருக்கு டிசம்பர் 2ம் தேதி அன்று வகுப்புகள் துவங்கும் என அறிவித்து உள்ளது. அத்துடன், பிறக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. தற்பொழுது பள்ளிகள் மற்றும் ஆர்ட்ஸ் கல்லூரிகள், பொறியில் கல்லூரிகளுக்கு விடுமுறையானது தொடர்கின்றது.