ஜூன் 30 வரை பள்ளி விடுமுறை! அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

07 May 2020 அரசியல்
arvindkejrivalcm.jpg

வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை, டெல்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், விடுமுறை அறிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

டெல்லியில் தற்பொழுது வரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர், இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், 65 பேர் டெல்லியில் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் தொற்று குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, வருகின்ற மே-18 முதல் ஜூன் 30ம் தேதி வரை, கோடை விடுமுறை வழங்கப்படுகின்றது. இந்தக் காலக்கட்டத்தில், கல்விக்காகவோ அல்லது பயிற்சிக்காகவோ, மாணவ, மாணவிகளைப் பள்ளிகளுக்கு அழைக்கவோ வற்புறுத்தவோக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

HOT NEWS