பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? மத்திய அமைச்சர் பதில்!

08 June 2020 அரசியல்
indianstudents.jpg

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்க உள்ளது. இந்நிலையில், எப்பொழுது பள்ளிகள் திறக்கும் என்றக் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. தொடர்ந்து இன்னும், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்னும் கடந்த கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்புத் தேர்வுகள், 11ம் வகுப்புத் தேர்வு மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்தத் தேர்வுகள் முடிந்துள்ளன.

பல மாநிலங்களில் விரைவில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்குள் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்தி முடிக்க மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அடுத்தக் கல்வியாண்டிற்கானப் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்றக் கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதனை செய்தியாளர்கள், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பாடத்திட்டத்தில் 30% வரை குறைத்து பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அநேகமாக ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு, பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS