எலியின் உடலில் இருந்து எய்ட்ஸை நீக்கி விஞ்ஞானிகள் மகத்தான சாதனை!

11 July 2019 தொழில்நுட்பம்
lab.jpg

எலியின் உடலில் பரிசோதனைக்காக செலுத்தப்பட்ட எய்ட்ஸ் வைரஸை, தற்பொழுது அந்த எலியின் டிஎன்ஏவில் இருந்து நீக்கி உள்ளனர். இது எய்ட்ஸ் ஆராய்ச்சியில் மாபெரும் மைல் கல்லாக மாறியுள்ளது.

உலகளவில் 37 மில்லியன் மக்கள், இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு, பல நூறு நிறுவனங்கள் இந்த எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் டெம்பிள் யூனிவர்சிட்டி’ஸ் லீவிஸ் கேட்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் யூனிவர்சிட்டி ஆஃப் நெப்ராஸ்கா மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள், இணைந்து நடத்திய ஆராய்ச்சியில், ஒரு சுண்டெலியின் உடலில், எய்ட்ஸ் வைரஸை இணைத்தனர். பின்னர், இந்த சுண்டெலியின் உடலில் உள்ள டிஎன்ஏவில் இருந்து, இந்த வைரஸை நீக்கி உள்ளனர்.

இந்த சிகிச்சை முறை சாத்தியமாகும்பட்சத்தில், கண்டிப்பாக, மனித இனத்தை இந்த எய்ட்ஸ் நோயில் இருந்து காப்பாற்ற முடியும் என நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். தற்பொழுது உள்ள, மருத்துவமுறையால், எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்த இயலாது. ஆனால், எய்ட்ஸ் உடல் முழுக்க அதிக வீரியத்துடன் செயல்படாமல் இருக்க உதவும். அதனாலேயே, இந்த எய்ட்ஸ் நோய்க்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில், விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே சமயம், இதற்கான மருந்தைக் கண்டுபிடித்துவிட்டால், அது சந்தையில் கொள்ளை லாபம் சம்பாதித்துத் தரும் என மருந்துகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களும், மும்முரமாக இறங்கி உள்ளன.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, 2020ம் ஆண்டு, கடைசிக்குள் இந்த எய்ட்ஸ் நோய்க்கான நிரந்தரத் தீர்வினை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விடுவர் என கருதுகின்றனர். எது எப்படியோ, அந்த 37 மில்லியன் மக்களைக் காப்பாற்றினால் சரி தான்!

HOT NEWS