காற்றின் மூலம் கொரோனா பரவும்! WHO அமைப்பிற்கு விஞ்ஞானிகள் கடிதம்!

08 July 2020 அரசியல்
coronalife.jpg

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது, காற்றின் மூலமும் பரவும் தன்மைக் கொண்டது என, உலகின் பல நாட்டு விஞ்ஞானிகள் ஹூ அமைப்பிற்குக் கடிதம் எழுப்பி உள்ளனர்.

உலக சுகாதார மையமானது, தினமும் கொரோனா வைரஸ் குறித்துப் புதிய தகவல்களை தெரிவித்து வருகின்றது. அப்படி புதிய தகவல் ஒன்றினை அந்த அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான மரியா வான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா எனப் பலர் கேட்கின்றனர். இது குறித்து, எவ்வித ஆதாரமும் ஹூ அமைப்பிடம் இல்லை. ஆனால், 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கூட்டாகவும், வெளிப்படையாகவும் ஒருக் கடிதத்தினை அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக ஆதாரம் இருப்பதாகவும், அதனையும் தற்பொழுது இணைத்து அனுப்பி உள்ளனர். அதனை தற்பொழுது ஹூ அமைப்பு ஏற்றுக் கொண்டு அறிவித்தால், பெரிய அளவில் தற்பொழுது கடைபிடிக்கப்படும் விஷயங்களை மாற்ற வேண்டி இருக்கும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS