இரண்டாவது தனியார் ரயில் வெற்றிகரமாக தொடங்கி வைக்கப்பட்டது!

17 January 2020 அரசியல்
2ndtejasexpress.jpg

முதல் தனியாரின் ரயிலின் வெற்றிகரமான சேவையைத் தொடர்ந்து, தற்பொழுது இரண்டாவது தனியார் ரயிலானது, தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

முதல் தேஜஸ் ரயில் (தனியார் ரயில்) ஆனது, டெல்லிக்கும்-லக்னோவிற்கும் இடையில், சில மாதங்களுக்குத் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த ரயில் மிகவும் சொகுசாக இருப்பதாக, பயணிகள் தகவல் அளித்தனர். இதனையடுத்து, அடுத்ததாக பல தனியார் ரயில்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதனால், இன்று காலை முதல் அடுத்த தனியார் ரயிலானது மும்பை மற்றும் அஹமதாபாத் நகர்களுக்கு இடையே, அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலினை, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பச்சைக் கொடி காட்டித் துவக்கி வைத்தார். இந்த ரயிலிலும், பல சொகுசு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. டிவி, உயர் ரக இருக்கை, அதிவிரைவு சேவை, தாமதம் ஆனால், நஷ்ட ஈடு, டிக்கெட்டினை கேன்சல் செய்தால் முழு டிக்கெட்டின் பணமும் திருப்பி தருதல், உயர்தர உணவு, ஏசி வசதி என இந்த ரயிலும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால், பயணிகள் பெருமளவில் பயனடைவர் எனவும், மேலும் இதனைப் போன்று பல ரயில்களை, விரைவில் மக்கள் எதிர்ப்பார்க்கலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், இந்த ரயிலிலும் டிக்கெட்டின் விலை அதிகமாகவே உள்ளது என மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS