2வது ரவுண்டுக்குத் தயாராகும் சீனா! மீண்டும் பரவ ஆரம்பித்தது கொரோனா!

12 May 2020 அரசியல்
covid192ndwave.jpg

தற்பொழுது சற்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த அபாயத்தினை நோக்கி இருக்கின்றது சீனா. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது கொரோனா வைரஸ். அந்த நாட்டின் ஊஹான் மாகாணத்தில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. தற்பொழுது வரை, இந்த வைரஸானது தன்னுடைய கோரத் தாண்டவத்தினை ஆடிக் கொண்டு தான் இருக்கின்றது.

இந்த நோய்க்கு, தற்பொழுது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். முப்பது லட்சம் பேர் வெறும் 150 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா உட்பட பல உலக நாடுகள், ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளன. அதன் மூலம், சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த இயலும் என நம்புகின்றனர். அதுவும் நல்லப் பலன்களையே வழங்கி வருகின்றது.

இந்த சூழ்நிலையில், சீனாவில் இந்த கொரோனா வைரஸானது எவ்வளவு வேகமாகப் பரவியதோ, அதே வேகத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனை, அமெரிக்கா உள்ளிட்டப் பல நாடுகள் சந்தேகத்துடன் கேள்விகளாக எழுப்பினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது அங்கு கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வருவதற்கான அச்சம் எழுந்துள்ளது.

சீனாவின் வடமேற்கு நகரமான ஜிலின் பகுதியில், கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு வருவதால், அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரமானது, வடகொரியா மற்றும் ரஷ்யாவுடன் தன்னுடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது. இதனால், அந்தப் பகுதியில் இருந்து, சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து அந்த மாகாணத்தின் தலைவர் பேசுகையில், பொதுஇடங்கள், மக்கள் அதிகம் கூடும் மால்கள், திரையறங்குகள், ரயில் நிலையங்கள் மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொற்று எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என, ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இது நீடித்தால், கண்டிப்பாக 2வது அலையினை உருவாக்கும் அபாயம் உள்ளது என்றுக் கவலைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS