இரண்டாவது அலை ஆரம்பித்தது புதிய அறிகுறிகள்! விழிபிதுங்கும் சீனா!

22 May 2020 அரசியல்
corona2ndcovid19.jpg

சீனாவில் தற்பொழுது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது, பரவ ஆரம்பித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஜூலானில் தற்பொழுது, இந்த கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகளானது தென்பட ஆரம்பித்துள்ளது. இதனால், அந்த நகரில் ஊரடங்கு உத்தரவினை, அந்நாட்டு அரசாங்கம் பிறப்பித்து உள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கொரோனா வைரஸானது, அந்த ஜூலான் மாகாணத்தில் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகள் மிகவும் தாமதமாகவே வெளிப்படுகின்றன எனவும், இதனால் நோயினை அடையாளம் கண்டறிவது மிகவும் சிக்கலாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, புதிவிதமான அறிகுறிகள் இந்த பகுதியில் காணப்படுவதாகவும், இது வலிமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த வைரஸினை எதிர்க்கும் சக்தியானது உடலில் இருந்தாலும் கூட, தற்பொழுது பரவும் வைரஸினை எதிர்க்கும் அளவிற்கு இல்லை எனக் கூறப்படுகின்றது. கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், சீனா வேகமாக செயல்பட்டு வருகின்றது.

கடந்த வார அறிவிப்பில், ஐந்து மருந்துகள் இறுதி கட்ட ஆய்வில் உள்ளதாகவும், பல புதிய மருந்துகளும் சோதனையில் உள்ளதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

HOT NEWS