இந்தியா பாகிஸ்தான் எல்லையில் 20 மீ சுரங்கம்! இராணுவம் தகவல்!

31 August 2020 அரசியல்
secrettunnel.jpg

இந்தியா பாகிஸ்தான் எல்லையில், 20 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் இருப்பது தற்பொழுது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில், தற்பொழுது சுமூக உறவுநிலை நீடிக்கவில்லை. தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்துப் பலத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் நாட்டில் இருந்து திருட்டுத்தனமாக, போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட, சட்டத்திற்கு விரோதமான பல விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனை இந்திய இராணுவம் தீவிரமாக கண்காணித்து தடுத்து வருகின்றது.

இந்த நிலையில், ஜம்மூ பகுதியில் உள்ள இந்திய எல்லைப்பகுதியில் இருந்து, 50 மீட்டர் வெளியே இரகசியப் பாதை ஒன்றினைக் கண்டறிந்து உள்ளனர். அந்த பாதையினை தொடர்ந்து, தேடி ஆய்வு செய்த பொழுது, அதில் பாகிஸ்தானின் முத்திரைக் குத்தப்பட்ட மணல் மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மணல் மூட்டைகள், பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் செல்லும் பாதையில் இருப்பதை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதிபடுத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அனைத்து இடங்களையும் அலசி ஆராயும் படி, பிஎஸ்எப் படைப்பிரிவு உத்தரவிட்டுள்ளது. இது போன்று வேறு ஏதேனும் சுரங்கங்கள் உள்ளனவா என, இந்திய வீரர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

HOT NEWS