ராஜாவிற்காக பிரசாத் ஸ்டுடியோவை முற்றுகையிட்ட பாரதிராஜா, சீமான்!

29 November 2019 சினிமா
bharatiraja.jpg

பிரசாத் ஸ்டுடியோவில் தான், இசைஞானி இளையராஜாவின் மியூசிக் ஸ்டுடியோவும் உள்ளது. அங்கு தான், தன்னுடையப் படங்களுக்கு ஆரம்பம் முதல் இசையமைத்து வருகின்றார். கடைசி வரையிலும், தன்னுடைய இசைப் பயணத்தை அங்கேயே கழிக்க விரும்புகின்றார்.

இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜாவிற்கு, அனுமதி மறுக்கப்பட்டது. முதலில் கோபம் கொண்ட இளையராஜா, பின்னர், பிரசாத் ஸ்டுடியோவிடம் வாடகை எவ்வளவு ரூபாயாக இருந்தாலும், தான் தருவதாகக் கூறினார். ஆனால், அதனை ஏற்க மறுத்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அவர் உள்ளே நுழைய தடை விதித்தது. இதனால், பெரும் அவதிக்குள்ளான ராஜா, தன்னுடயை நண்பரான பாரதிராஜாவிடம் உதவி கோரினார்.

இதனையடுத்து, நேற்று திடீரென்று பாரதிராஜாவும், நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகைத் தந்தனர். இதனால், அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை, ஸ்டுடியோவின் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆனால், இவர்கள் இருவருமே பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் பேச விரும்புவதாக கூறினார்கள். ஆனால், அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. பின்னர், இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

HOT NEWS