சிம்பு படத்தில் சீமான்! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாநாடு!

07 March 2020 சினிமா
seemanmaanadu.jpg

சிம்பு படத்தில் சீமான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தின் சூட்டிங்கானது, தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில், பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். பாரதி ராஜா, எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் இதில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது நாம்தமிழர் கட்சியின் ஒருருங்கிணைப்பாளரான சீமானும், இந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு, சீமான் சென்றுள்ளார். அங்கு பணிபுரியும் கலைஞர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துள்ளார். இது தற்பொழுது, இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்து, எவ்வித அறிவிப்பினையும் படக் குழுவினர் வெளியிடவில்லை.

மாநாடு படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பிற்காக, ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவிற்கு சிம்புவின் மாநாடுக் குழு செல்ல உள்ளது என்பது குறிப்பிடதக்கத்து.

HOT NEWS