சீறு திரைவிமர்சனம்!

09 February 2020 சினிமா
seeru.jpg

கீ, ஜிப்சி, கொரில்லா உள்ளிட்ட படங்கள் படுதோல்வியினை அடைந்த நிலையில், தற்பொழுது நடிகர் ஜீவா சீறியிருக்கும் திரைப்படம் சீறு. வித்தியாசமானக் கதைகள், கைக் கொடுக்காததால், வழக்கம் போல கமர்சியல் கதைக்கு மாறிவிட்டார்.

சென்னையை மையப்படுத்தியக் கதை. இந்தப் படத்தில், கேபிள் ஆப்பரேட்டராக, நடிகர் ஜீவா நடித்துள்ளார். அவர், தன்னுடையப் பகுதியில் உள்ள எம்எல்ஏவின் செயல்களை விமர்சிக்கும் விதத்தில், பல உண்மைகளை வெளியில் கூறுகின்றார். இதனையடுத்து, எம்எல்ஏ ஜீவாவினைக் கொல்ல முயல்கின்றார். இதற்காக, சென்னையைச் சேர்ந்த, ரவுடியினை அனுப்புகின்றார். ஆனால், அந்த ரவுடியோ ஜீவாவினை கொல்ல வீட்டிற்கு வருகின்றார். அங்கு, ஜீவாவின் தங்கை பிரசவ வலியால் துடிப்பதைப் பார்த்து, அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்க்கின்றார். அந்த ரவுடிக்கு நன்றிச் சொல்ல அவரைத் தேடுகின்றார் ஜீவா. அவருக்கு என்ன ஆனாது? அரசியல்வாதி என்ன ஆனார்? ஜீவாவின் காதல் கை கூடியதா? என பல சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் பாய்கின்றது சீறு.

படத்தில் வெறும் ஊறுகாய் அளவிற்கு தான், காதல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் இமான் இருப்பது தெரிகின்றது. ஜீவாவின் நடிப்பு எப்பொழுதும் போல் அருமையாகத் தான் இருக்கின்றது. இது கமர்ஷியல் படம் என்றாலும், பெண்களை மையப்படுத்திய படம் என்பது தான், நம்மை ஈர்க்கும் விஷயம் ஆகும்.

படத்தில் லாஜிக் எதுவும் பார்க்க வேண்டாம். மற்றபடி, சீறு திரைப்படம் சிறப்பான திரைப்படம்.

ரேட்டிங் 3.5

HOT NEWS