கமல்ஹாசன் திரையுலகச் சக்கரவர்த்தி எனவும், ஆனால் அரசியலில் எல்கேஜி மாணவன் எனவும் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், சினிமாவினைப் பொறுத்த வரையில், கமல்ஹாசன் ஒரு ஜாம்பவான், திரையுலகச் சக்கரவர்த்தி, அவர் ஒரு உலக நாயகன். என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அரசியலில் அவர் ஒரு எல்கேஜி மாணவன். இன்னும் கூற வேண்டும் என்றால், அவர் எல்கேஜியினைக் கூடத் தாண்டவில்லை என்று நக்கலடித்துள்ளார்.
சென்னையில் மதுக் கடைகள் திறக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த கமல், காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?” என்று விமர்சனம் செய்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தற்பொழுது செல்லூர் ராஜூ கமலினைக் கிண்டல் செய்து பேட்டியளித்துள்ளார்.