தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தன்னுடைய அடுத்தப் படத்தினை உருவாக்கும் பணியினைத் தொடங்கி உள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில், கடந்த ஆண்டு என்ஜிகே படம் வெளியானது. இது தான், செல்வராகவன் இயக்கியிருந்த கடைசி படம். அதன் பின்னர், வேறு எந்தப் படத்தினையும் அவர் இயக்கவில்லை. இதனையடுத்து, தற்பொழுது அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் மூலம், புதியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதன்படி, தற்பொழுது புதிய படத்தின் கதை உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் படத்தினைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளது, கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்தப் படத்திற்கான கதையினை, தனுஷிற்கு ஏற்றாற் போல செல்வராகவன் எழுதி வருகின்றாராம். இது, புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே சமயம், தனுஷிடம் இந்தக் கதையை கூறியதாகவும், அதனை தனுஷ் ஏற்காததால், தற்பொழுது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை அவர் எழுதி வருகின்றார் எனவும், கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியோ, படம் பிளாப் ஆகாமல் இருந்தால் சரி தான்.