சுயசார்பு இந்தியா! சீமான் அன்று சொன்னது, இன்று மோடியும் கூறுகின்றார்!

14 May 2020 அரசியல்
seeman-election-symbol.jpg

மே-12ம் தேதி இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. சுமார் 34 நிமிடங்கள் மக்களுக்காக உரையாற்றினார்.

அவர் பேசுகையில், நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்த வேண்டி இருப்பதாகவும், இந்தியா 21ம் நூற்றாண்டின் வல்லரசாக மாறுவதற்கு சுயசார்புத் தன்மை மிகவும் அவசியம் எனவும் கூறினார். உள்ளூர் பொருட்களை உலகத் தரத்திற்கும், உலகத் தரம் கொண்ட பொருட்களை உள்ளூருக்கும் கொண்டு வர, வழிவகை செய்யப்படும். சுய சார்பு பாரதம் பற்றி தொடர்ந்து பேசினார்.

இதனை தற்பொழுது அனைவருமே வரவேற்று உள்ளனர். இந்நிலையில், ஒரு சில விஷயங்களை நாம் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. சுய சார்பு பாரதம் பற்றி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பேசி வருகின்றார். தொடர்ந்து, அனைத்து மேடைகளிலும் சீமான் பேசும் பொழுது, விசாயம், மேட் இன் இந்தியா பொருட்கள், உள்ளூர் பொருட்களை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்டவைகளை அதிகமாகப் பேசி வந்தார்.

அவர் கூறுவது போல் யாராலும் செய்ய இயலாது என, பலரும் அவரைக் கிண்டல் செய்தனர். தற்பொழுது அதனையே பிரதமர் மோடியும் கூறியுள்ளார். அதனை இந்தியா அளவில், அனைவரும் வரவேற்று வருகின்றனர். நம் நாட்டில் சொல்பவரை மட்டுமேப் பார்க்கின்றனர் என்பது, இதில் இருந்து தெரிகின்றது. சொல்லும் விஷயத்தினைப் பற்றி பெரும்பாலும் யாரும் கவலைப்படுவதில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, உலகின் பல நாடுகளுக்குப் பயணம் செய்த பிரதமர் மோடி, உலகின் பெரு நிறுவனத் தலைவர்களைச் சந்தித்தார். அவர்களை, நம் பாரத நாட்டில் வந்து தொழில் தொடங்க அழைப்பும் விடுத்தார். அவருடைய அழைப்பினை ஏற்றுப் பல நிறுவனங்கள் இந்தியாவினை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கின. இந்நிலையில், அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தார்.

அவர் வந்தது முதல், வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்தும் குறைக்கப்பட்டன. அதே போல், அமெரிக்காவிற்குள் வேலைக்கு அனுமதிக்கத் தேவையான ஹெச்1பி விசாவும் குறைக்கப்பட்டது. இதனால், இந்தியாவிற்குள் பல நிறுவனங்களால், தொழிலைத் தொடங்க இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்க ஆரம்பித்தது.

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால், உலகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவானது பின்பற்றப்படுகின்றது. இதனால், உலகளவில் பொருளாதார முடக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியப் பிரதமர் தற்பொழுது புதிய பொருளாதாரத் தொடக்கத்தினை நோக்கி நகர்கின்றார். ஏனெனில், இனி வெளிநாட்டு நிறுவனங்களை நம்பினால், கண்டிப்பாக அடுத்து ஏதாவது பாதிப்பு என்றால், கண்டிப்பாக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

ஆனால், நம்முடைய இந்தியாவினைச் சேர்ந்த நிறுவனங்களை ஊக்குவித்தால், அவர்கள் தொடர்ந்து வளர்ந்து உலகத் தரத்திற்குச் செல்வர். அது நம்முடையப் பொருளாதாரத்திற்கு, மாபெரும் நம்பிக்கையாகவும் உதவியாகவும் அமையும். அதனை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறு அவர் கூறியிருக்கின்றார் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS