செப்டம்பருக்குள் இறுதித் தேர்வு! தயாராகும் கல்லூரிகள்!

07 July 2020 அரசியல்
ugc.jpg

வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் தங்களுடைய ஆண்டு இறுதித் தேர்வு செமஸ்டர்களை வைத்து முடிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் மிக மோசமான வேகத்தில் பரவிக் கொண்டே உள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாக, இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கானது அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டின் இறுதித் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சகம் புதிய கடிதம் ஒன்றினை உள்துறை செயலருக்கு அனுப்பி உள்ளது. அதன்படி, நடப்புக் கல்வியாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள், இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மற்றும் கல்லூரிகளும் நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளது.

இது குறித்து, தற்பொழுது யூஜிசி அமைப்பானது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நடப்பாண்டின் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடத்தி முடித்திருக்க வேண்டும் என்றுக் கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்பொழுது செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் உள்ளதால், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இவைகள் நடைபெறும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS