சின்னத்திரை நடிகர் ராஜசேகர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது ஒரு பொன் மாலை பொழுது என்றப் பாடலை, கேட்காத தமிழர்கள் கிடையாது. அப்படிப்பட்ட அருமையானப் பாடலை இசையமைத்தவர் இசைஞானி என்றால், அப்பாடலில் நடித்தவர் தான் இந்த ராஜசேகர்.
வெள்ளித்திரையில் ஆரம்பித்த இவர் பயணம், சின்னத்திரையிலும் நீண்டது. பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜசேகர். பல திரைப்படங்களிலும், இணை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவரது உடலுக்குப் பல திரை நட்சத்திரங்களும், தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.