ஏழு வண்ண டோக்கன்! அதிரடி முயற்சிகள்! அள்ளிச் செல்லும் குடிமகன்கள்!

16 May 2020 அரசியல்
tasmactooken.jpg

இன்று தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்க, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பனை தமிழக டாஸ்மாக் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு, இடைக்காலத் தடை விதித்தனர். தமிழகத்தின் வருவாய் கணிசமாகக் குறைந்துள்ளதை, தமிழக அரசு வழக்கறிஞர் சுட்டிக் காட்டியதால், இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. காஞ்சிபுரம் பகுதியில் 16 டாஸ்மாக் கடைகளே திறக்கப்படுகின்றன. சரியான விதத்தில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும், மால்கள், வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கத் தடை தொடர்கின்றது.

அதே போல், கடந்த 8ம் தேதி அன்று எந்தெந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதோ, அந்தக் கடைகள் மட்டுமே மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 70 பேருக்கு மட்டுமே சரக்குக்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. நேரத்திற்கு ஏற்றாற் போல, டோக்கன்கள் வழங்கப்படுகின்றது. மொத்தம் ஏழு வண்ணத்தில் டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

மதுபானம் வாங்க வருபவர்கள், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். டோக்கனுக்குரிய நேரங்களிலேயே வர வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான விதிகள் விதிக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS