இந்தியாவின் நம்பர் ஒன் நடிகரும், பாலிவுட் பாசா என்று அழைக்கப்படும் நடிகருமான ஷாரூக் கான் தன்னுடைய வீட்டினை, பிளாஸ்டிக் கவரால் மூடியுள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மும்பையில் உள்ள தன்னுடைய பிரம்மாண்டமான வீட்டினை, இராட்சத பிளாஸ்டிக் கவர்களைக் கொண்டு, ஷாரூக் கான் மூடியுள்ளார். எல்லாரும், கொரோனா வைரஸால் தான் மூடியுள்ளனர் என்றுக் கூறி வந்தனர்.
ஆனால், அவர் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மும்பையில் ஒவ்வொரு வருடமும், தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கும். அதனால், அவருடைய வீட்டிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, வீட்டினை பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு மூடியுள்ளார். இதனை, பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.